Case No. SA 10606/2020 கிராம வரைபட நகல்களை தகவலாக வழங்கக் கோரி மனு
இது குறித்து இன்றைய விசாரணையில் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு ஆஜரான பொதுத் தகவல் அலுவலரிடம் வினவியபோது, மேல்முறையீட்டாளரின் சட்டப்பிரிவு 6(1) மனுவானது தகவல் வழங்கும் பொருட்டு 21.09.2020 அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு சட்டப்பிரிவு 6(3)-ன் கீழ் மாற்றுதலில் அனுப்பி வைக்கப்பட்டதாகவும், மேல்முறையீட்டு அலுவலரின் 10.11.2020 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேல்முறையீட்டு அலுவலரை தொடர்புக் கொண்டு தகவலை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 08.10.2021 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக சேலம் வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட்சியர்/பொதுத் தகவல் அலுவலர் மேல்முறையீட்டாளருக்கு அவர் கோரிய தகவலை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்து, அதன் நகல் மற்றும் அனுப்பியதற்கான அஞ்சல் துறை ரசீதின் நகல் ஆகியவற்றை வாட்ஸ் அப் செயலி மூலம் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார். பொதுத் தகவல் அலுவலரின் வாதுரையை இவ்வாணையம் பதிவு செய்து, விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுகின்றது:-
இவ்வாணை கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள் மேல்முறையீட்டாளர், 14.08.2020 தேதியிட்ட சட்டப்பிரிவு 5(1) மனுவில் கோரியுள்ள பனமரத்துப்பட்டி மற்றும் சேலத்தான்பட்டி கிராம வரைபட நகல்களை, சேலம் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம் பொதுத் தகவல் அலுவலரிடமிருந்து பெற்று, மேல்முறையீட்டாளருக்கு சட்டப்பிரிவு 7(6)-ன்படி கட்டணமின்றி ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் அனுப்பி வைத்து, அவர் அதனை பெற்று ஏற்பளிப்பு செய்த ஒப்புகை அட்டையின் நகல் மற்றும் வழங்கப்பட்ட தகவலின் நகலை இணைத்து ஒரு அறிக்கையாக இவ்வாணை கிடைக்கப் பெற்ற 21 தினங்களுக்குள் ஆணையத்திற்கு சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிட்டு, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு செய்து, இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகிறது.

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
