Case No.SA 17237/2022 எந்தெந்த ஆவணங்களின் அடிப்படையில் தற்போதைய பட்டாதாரர் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பதை தகவல்களாக வழங்கக் கோரி மனு
சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான தனது இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (10.01.2023) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் பொதுத் தகவல் அலுவலர் திரு.இளஞ்சேரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலகம், புதுக்கோட்டை மாவட்டம் ஆகியோர் பங்கேற்றார். இந்த விசாரணையில் தொலைபேசி வாயிலாக பலமுறை முயன்றும் மனுதாரரை தொடர்பு கொள்ள இயலவில்லை.
இன்றைய விசாரணையின் முடிவில், மனுதாரரை தொடர்பு கொள்ள இயலாத நிலையில், மேற்படி, 28.05.2022 தேதியிட்ட மனுதாரரின் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் கோரியுள்ள புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், அரசர்குளம் மேல்பாதி கிராமத்தில் புல எண்.181 உட்பிரிவு 3E2 உள்ள சொத்தானது எந்தெந்த ஆவணங்களின் அடிப்படையில் தற்போதைய பட்டாதாரரான திரு.ராமசாமித்தேவர் மகன் திரு.சித்திரைவேலு என்பவருக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பது தொடர்பான தகவலை மனுதாரருக்கு இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள், அலுவலக முத்திரையுடன் கூடிய சான்றொப்பமிட்டு மனுதாரருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் வழங்கி, அதனை மனுதாரர் பெற்று ஏற்பளிப்பு செய்ததற்கான ஒப்புகை அட்டையின் நகலினை இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்க புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட்சியர் / பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது.
மேற்படி, இவ்வாணையத்தின் ஆணைக்கிணங்க பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு தகவல் வழங்க தவறும் பட்சத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 20(1) மற்றும் 19(8)(b)-ன்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.
Download
Case No.SA 17237/2022 எந்தெந்த ஆவணங்களின் அடிப்படையில் தற்போதைய பட்டாதாரர் பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்பதை தகவல்களாக வழங்கக் கோரி மனு

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
