Case No.SA 16616/2022 OSR(1856–1878),IFR(1853),RSR(1901-1920),SLR(1923-1955),RSLR(1955-1965),SLR,FMB,A Register,Tahsildar Settlement Order(1963),Inam B Register(193),கைசிட்டா(1979),SLR & RSLR-க்கு முந்தைய FMB தகவல்களாக வழங்கக் கோரி மனு

எனவே, பொதுத் தகவல் அலுவலர் வாதம் மற்றும் ஆவணங்களை இவ்வாணையம் பரிசீலனை செய்ததில், மேற்படி, மனுதாரரின் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)ன்கீழ் கோரியுள்ள, தகவல்கள் மனுதாரருக்கு பாத்தியப்பட்டதாக ஏதேனும் ஆவணங்களை மனுதாரர் சமர்ப்பிக்கும் (காண்பிக்கும்) பட்சத்தில், பொதுத் தகவல் அலுவலர், இவ்வாணை கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள், மேற்படி ஆவணங்களை பராமரிக்கக்கூடிய (1) மாவட்ட ஆட்சியர் அலுவலக பதிவறை, (2) சென்னை, தமிழ்நாடு ஆவண காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி அலுவலகம், (3) 6601 607601, சேப்பாக்கம், நில நிர்வாக ஆணையர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் மேற்படி தகவல் தொடர்புடைய ஆவணங்களின் உண்மைத்தன்மையினை எழுத்துப்பூர்வமாக அலுவலக தனிநபர் மூலம் பெற்றுக்கொண்டு, பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு கடிதம் (அல்லது தொலைபேசி) வாயிலாக தெரிவித்து, அது தொடர்பான ஆவணங்களை சட்டப்பிரிவு 2(j)ன்படி பார்வையிட்டு குறிப்பெடுத்துக்கொள்ள அனுமதித்தும், அவருக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஆவணங்களின் நகலினை, மனுதாரர் 100 பக்கங்களுக்கு மிகாமல் எழுதிக் கோரினால், அத்தகவல்களை கட்டணம் ஏதுமின்றி(100 பக்கத்திற்கு மேல் எனில், பக்கத்திற்கு ரூ.2- வீதம் மனுதாரர் செலுத்தும் பொருட்டு), அலுவலக முத்திரையுடன் கூடிய சான்றொப்பமிட்டு, மனுதாரருக்கு நேரில் அல்லது ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் வழங்கி, அதனை மனுதாரர் பெற்று ஏற்பளிப்பு செய்ததற்கான ஒப்புகை அட்டையின் நகலினை இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) / பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது.
மேலும், மனுதாரர் மனுவில் கோரியுள்ள ஆவணங்கள் தங்கள் பொது அதிகார அமைப்பு மற்றும் மேற்குறிப்பிட்டுள்ள சம்பந்தப்பட்ட அலுவலகங்களின் பராமரிப்பில் இல்லாத பட்சத்தில், அது சம்மந்தமாக பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), புதுக்கோட்டை அவர்கள் அலுவலக முத்திரையுடன் கூடிய சான்றொப்பத்துடன், ரூ.20/- மதிப்பிலான ஆணை உறுதி பிரமாண பத்திரம் (Sworn Affidavit) (ஆவணம் பராமரிப்பில் இல்லை என்பதை) மூலம் உறுதி செய்யவும், பொதுத் தகவல் அலுவலர், மேற்படி ஆணை உறுதி பிரமாண பத்திரத்தினை மனுதாரருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் அல்லது நேரில் தகவலாக வழங்கவும் உத்தரவிடப்படுகிறது. இதன் வாயிலாக, மனுதாரரால் கோரப்படும் தகவல் (மனுதாருக்கு பாத்தியப்பட்ட) குறித்து நீதிமன்றம், வருவாய் துறை அணுகி தனது வாதுரைகளை எடுத்துரைக்க ஏதுவாக அமையக்கூடும். மேற்குறிப்பிட்டவாறான தகவல்கள் மூன்றாம் நபர் தகவல்களாக இருக்கும் பட்சத்தில், மூன்றாம் நபர் ஆட்சேபனை கடிதத்தினை மனுதாரருக்கு தகவலாக வழங்கவும் உத்தரவிடப்படுகிறது.
மேற்படி, இவ்வாணையத்தின் ஆணைக்கிணங்க பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு தகவல் வழங்க தவறும் பட்சத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 20(1) மற்றும் 19(8)(b)-ன்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.

Download

Case No.SA 16616/2022 OSR(1856–1878),IFR(1853),RSR(1901-1920),SLR(1923-1955),RSLR(1955-1965),SLR,FMB,A Register,Tahsildar Settlement Order(1963),Inam B Register(193),கைசிட்டா(1979),SLR & RSLR-க்கு முந்தைய FMB தகவல்களாக வழங்கக் கோரி மனு

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்