Case No.SA 2631/2016 வருவாய் துறையில் உள்ள அனைத்து ஆவணங்களும் பொது ஆவணங்களே.

4. விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
(i) இன்றைய விசாரணைக்கு ஆணையத்திலிருந்து அறிவிப்பு கடிதம் அனுப்பியும், விசாரணைக்கு ஆஜராகாத சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர் மீது தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 20(2)ன் கீழ் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அவருடைய உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யக் கூடாது என்பதற்கு உரிய விளக்கத்தை இவ்வாணை கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள் ஆணையத்திற்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்படுகிறது.
மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1)ன் கீழ் 23.11.2015 அன்று தாக்கல் செய்துள்ள மனுவில் கோரியுள்ள தகவல்களை மேல்முறையீட்டாளருக்கு இவ்வாணை கிடைக்கப் பெற்ற இரண்டு வார காலத்திற்குள் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 7(6)ன் கீழ் கட்டணம் ஏதுமின்றி ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் அனுப்பிவிட்டு அவர் பெற்றுக் கொண்டதற்கு அத்தாட்சியாக ஒப்புகை அட்டையின் நகலை 15 தினங்களுக்குள் ஆணையத்திற்கு சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டு, இம்மேல்முறையீட்டு மனுவின் மீது மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு செய்து, இம்மேல்முறையீட்டு மனு முற்றாக்கப்படுகின்றது.

Download

Case No.SA 2631/2016 வருவாய் துறையில் உள்ள அனைத்து ஆவணங்களும் பொது ஆவணங்களே.

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்