Case No.SA 2712/18 வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் மீது கூறப்பட்ட குற்றசாட்டின் அடிப்படையில் மாவட்ட ஆட்சிதலைவர் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம்
5. விசாரணையில் ஆஜரான மனுதாரர் அவர்கள் தான் மேற்படியான தகவல் கோரவில்லை என்றும், 10.01.2018 தேதியிட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புதுறை இயக்குனர் அலுவலகம் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட தனது புகாரில் உள்ள திரு.கணேஷ்குமார் வருவாய் கோட்டாட்சியர், திருச்செந்தூர் அவர்கள் மீது உள்ள புகார் மனுவை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் விசாரணை நடத்திய விவரங்களை தகவலாக கோரியதற்கு, பொதுத் தகவல் அலுவலர் எந்தவித தொடர்பும் இல்லாத தகவலை அளித்துள்ளார் என்றும், பொதுத் தகவல் அலுவலர் அவர்கள் தான் கோரிய தகவல்களை உள்நோக்கத்துடனே மறுத்துள்ளார் என்றும், தான் கோரிய தகவல்களை வழங்க பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடவேண்டுமென்றும் வாதிட்டார்.
6. எனவே, இன்றைய விசாரணையின் முடிவில், கீழ்கண்டவாறு ஆணை பிறப்பிக்கப்படுகின்றது:
1. மனுதாரர் 16.02.2018 தேதியிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1)ல் கோரியுள்ள தகவல் தொடர்பாகவும், Tr.கனேஷ்குமார் வருவாய் கோட்டாட்சியர், திருச்செந்தூர் அவர்கள் மீது கூறப்பட்ட குற்றசாட்டின் அடிப்படையில் மாவட்ட ஆட்சிதலைவர் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் தொடர்பாகவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள், மனுதாரர் மற்றும் திரு.கனேஷ்குமார் அவர்களை விசாரணை செய்து, அது குறித்ததான விரிவான விசாரணை அறிக்கையினை இவ்வாணை கிடைக்கப்பெற்ற 20 நாட்களுக்குள் மனுதாரருக்கும், இவ்வாணையத்திற்கும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுத் தகவல் அலுவலர் மூலம் அனுப்பிவைக்க வேண்டுமென்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு இவ்வாணையம் உத்தரவிட்டு, இவ்வழக்கின் விசாரணை முற்றாக்கம் செய்யப்படுகிறது.
Download
Case No.SA 2712/18 வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் மீது கூறப்பட்ட குற்றசாட்டின் அடிப்படையில் மாவட்ட ஆட்சிதலைவர் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம்

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
