Case No SA 32664/2014 ஏறத்தாழ 2 வருடம், 3 மாதங்கள் ஆகியும் தமக்கு இதுவரை பொதுத் தகவல் அலுவலர் எந்தத் தகவலும் வழங்கவில்லை

மனுதாரரின் சட்டப்பிரிவு 19(1)ன்கீழான 28.11.2013 நாளிட்ட மனுவை 29.11.2013 அன்று பெற்றுக் கொண்டு சட்டப்பிரிவு 19(6)ன்படி குறிப்பிட்ட காலக் கெடுவான 45 நாட்களுக்குள்ளும், ஏறத்தாழ இரண்டு வருடம் காலம் தாழ்த்தியும் மனுதாரருக்கு தகவல் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காத காட்பாடி வட்டாட்சியர் அலுவலக முன்னாள் மேல்முறையீட்டு அலுவலர்/தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் (29.11.2013 முதல் 15.01.2014 வரை காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு அலுவலராக இருந்தவர்) மீது அரசு விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அவரது உயரதிகாரிக்கு ஏன் சிபாரிசு செய்யக் கூடாது என்பதற்கு அவரது எழுத்துமூலமான விளக்கத்தை இவ்வாணையத்தில் நடைபெறும்
மறுவிசாரணையன்று நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க காட்பாடி வட்டாட்சியர் அலுவலக முன்னாள் மேல்முறையீட்டு அலுவலருக்கு இதன் மூலம் உத்திரவிடப்படுகிறது.
மேற்கூறிய ஆணை 1 மற்றும் 2ல் தெரிவித்துள்ள நபர்கள் (29.10.2013 முதல் 29.11.2013 வரை சேவூர் கிராம நிர்வாக அலுவலக உதவிப் பொதுத் தகவல் அலுவலராக இருந்தவர் மற்றும் 29.11.2013 முதல் 15.01.2014 வரை காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு அலுவலராக இருந்தவர்) யார் மற்றும் அவர்கள் தற்போது எங்கு பணிபுரிகிறார்கள் என்ற விவரத்தை ஒரு பிரமாண வாக்குமூலமாக தயார் செய்தும், மேற்கூறிய ஆணை 1 மற்றும் 2ல் தெரிவித்துள்ள நபர்களுக்கு இவ்வாணையை சார்வு செய்து அவர்கள் ஏற்பளிப்பு செய்த நகலையும் இவ்வாணையத்தில் நடைபெறும் மறுவிசாரணையன்று நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க காட்பாடி வட்டாட்சியர் அலுவலக தற்போதைய பொதுத் தகவல் அலுவலர்ருக்கு இதன் மூலம் உத்திரவிடப்படுகிறது.
மனுதாரருக்குரிய 3 இனங்களுக்கான தகவலை சட்டப்பிரிவு 7(6)ன்படி, கட்டணமின்றி இவ்வாணை கிடைக்கப் பெற்ற 30 தினங்களுக்குள் பதிவுத் தபால் மூலம் அனுப்பி வைத்து, மனுதாரர் பெற்று ஏற்பளிப்பு செய்த ஒப்புகை அட்டையின் நகல், மற்றும் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவலின் நகல் ஆகியவற்றை இவ்வாணையத்தில் நடைபெறும் மறுவிசாரணையன்று நேரில் ஆஜராகி சமர்ப்பிக்க காட்பாடி வட்டாட்சியர் அலுவலக தற்போதைய பொதுத் தகவல் அலுவலருக்கு இதன் மூலம் உத்திரவிடப்படுகிறது.
வழக்கின் மறுவிசாரணை தேதி பின்னர் அறிவிக்கப்படும். அன்றைய தினம் பொதுத் தகவல் அலுவலர் மற்றும் மனுதாரர் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் உத்திரவிடுகிறது.

Download

Case No SA 32664/2014 ஏறத்தாழ 2 வருடம், 3 மாதங்கள் ஆகியும் தமக்கு இதுவரை பொதுத் தகவல் அலுவலர் எந்தத் தகவலும் வழங்கவில்லை

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்