Case No.SA 407/2015 மனுதாரர் கேட்டுள்ள ஒரு இனத்திற்கான தகவலை பதிவு தபாலில் அனுப்பி வைக்கும்படி உத்தரவு
மனுதாரருக்கு 23.12.2014 நாளிட்ட கடிதத்தில் தகவல் வழங்கியுள்ளார். அதிலும் திருப்தியடையாத மனுதாரர் சட்டப்பிரிவு 19(3)ன்கீழ், 05.01.2015 நாளிட்ட தனது இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இவ்வாணையத்தில் இன்று (22.03.2016) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
3. இன்றைய விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் வழங்கப்படுகின்றன:-
மனுதாரர் ஒரு இனத்திற்கான தகவலை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு செய்துள்ளார். அதில் தனக்கு கோவில்பட்டி வட்டம், மந்தித்தோப்பு கிராமம் புன்செய் சர்வே எண்கள் 110/1 மற்றும் 110/2க்கான வகைப்பாடு பதிவேட்டின் நகல் கேட்டுள்ளார். அதற்கு முதல் மேல்முறையீட்டு அலுவலர் ஆவணங்களின் நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆவண காப்பறையில் இல்லையென்றும், கிராம நிர்வாக அலுவலரிடம் மனுச் செய்து பெற்றுக்கொள்ளலாம் என்ற முறையற்ற தகவலை பதிலாக அளித்துள்ளார். வகைப்பாடு பதிவேடு என்பது நிரந்தரமான பதிவேடு என்றும், அவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படவேண்டிய பதிவேடும் என்றும் இன்றைய விசாரணைக்கு பொதுத் தகவல் அலுவலர் சார்பாக ஆஜரான தனித்துணை ஆட்சியர் (சிறப்பு செயலாக்க திட்டம்) அவர்கள் தெரிவித்தார். மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆவணக்காப்பகத்தில் வகைப்பாடு பதிவேட்டை யாரால் பராமரிக்கப்படவேண்டும் என்பதற்கு பொதுத் தகவல் அலுவலர் தான் பொறுப்பானவர் என்பதை இவ்வாணையம் உறுதிபட தெரிவிக்கிறது. ஆதலால் இவ்வாணை கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக்குள் மனுதாரர் கேட்டுள்ள ஒரு இனத்திற்கான தகவலை பதிவு தபாலில் அனுப்பிவைத்து, மனுதாரருக்கு அனுப்பப்பட்ட தகவலின் நகலினையும், மனுதாரர் பெற்றுக் கொண்டதற்கான நகலினையும் ஒரு அறிக்கையாக இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்கும்படி பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்படுகிறது. தவறும் பட்சத்தில் தகவல் அறியும் உரிமைசட்டத்தின்படி இவ்வாணையம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை பொதுத் தகவல் அலுவலருக்கு அறிவுறுத்துகிறது.
4. வழக்கின் மறுவிசாரணை 31.05.2016. அன்றைய தினம் பொதுத் தகவல் அலுவலர் மற்றும் மனுதாரர் தவறாமல் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் உத்திரவிடுகிறது.
Download
Case No.SA 407/2015 மனுதாரர் கேட்டுள்ள ஒரு இனத்திற்கான தகவலை பதிவு தபாலில் அனுப்பி வைக்கும்படி உத்தரவு

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
