Case No.SA 4971/2019 நிலஉடமை மேம்பாட்டுத் திட்டத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய "அ" பதிவேடு மற்றும் சிட்டா பதிவேட்டின் ஒளிநகல்கள் கோரி மனு
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலூக வைப்பூர் கிராமம் புலஎண்கள் 117/3 என்பதற்கான நிலஉடமை மேம்பாட்டுத் திட்டத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய “அ” பதிவேடு மற்றும் சிட்டா பதிவேட்டின் ஒளிநகல்கள், மேற்படி புலஎண்களுக்கான உரிமைதாரர் பெயர், விஸ்தீரணம், உட்பிரிவு புலஎண் ஆகியவற்றில் மாறுபாடுகள் இருந்தால் அவற்றிற்கான ஆவணங்களின் ஒளிநகல்கள், தான் கோரும் ஆவணங்கள் அழிக்கப்பட்டிருந்தால் அதற்கான அழிப்புப்பதிவேட்டின் நகல், மேலும் வேறு அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டிருந்தால் ஒப்படைக்கப்பட்ட அலுவலகத்தின் ஒப்புகைச் சீட்டின் ஒளிநகல் என்பது உள்ளிட்ட தகவல்களைக் கோரியுள்ளார்.
பொதுத் தகவல் அலுவலரிடமிருந்து எந்தவித பதிலும் பெறப்படாத நிலையில் மனுதாரர் பிரிவு 19 (1)-ன்கீழ் 25/02/2019-ல் தமது முதல் மேல் முறையீட்டு அனுப்பியுள்ளார். மேல்முறையீட்டு அலுவலரிடமிருந்து எந்தவித பதிலும் பெறப்படாத நிலையில் மனுதாரர், பிரிவு 19(3)-ன்கீழ் 29/05/2019-ல் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு இரண்டாம் மேல் முறையீட்டு மனுவை அனுப்பியுள்ளார்.
அந்த மனு தமிழ்நாடு தகவல் ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வரப்பெற்ற தேதியின் அடிப்படையில் காலவரிசை பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வைக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல மாதங்கள் ஆகியும் முழுமையான தகவல்கள் வழங்கப்படாத மனுதாரர்களின் மனுக்களின் மீது மாநில தலைமை தகவல் ஆணையர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுத் தகவல் அலுவலர்களுடன் 18.09.2020 அன்று காணொலி காட்சி மூலம் விவாதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் போளூர் வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட்சியர், ந.க.எண்.அ3/3357/2019 நாள் 15.09.2020 என்ற கடிதம் மூலமாக மனுதாரரின் கோரிக்கைகளுக்கு அனைத்துத் தகவல்களையும் வழங்கியமைக்கான சான்றாக அவற்றின் நகல்களை ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார். மனுதாரரும் தனது கோரிக்கைகளுக்கான அனைத்துத் தகவல்களையும் பொதுத் தகவல் அலுவலர் வழங்கிவிட்டதாகவும், தாம் மனநிறைவு அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆகவே இந்த வழக்கை முற்றாக்கி ஆணையிடப்படுகிறது.
Download
Case No.SA 4971/2019 நிலஉடமை மேம்பாட்டுத் திட்டத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய “அ” பதிவேடு மற்றும் சிட்டா பதிவேட்டின் ஒளிநகல்கள் கோரி மனு

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
