Case No SA 5922/2015 VAO, வட்டாட்சியர் அலுவலகம் மேல் அதிகாரிகள் மற்றும் கோட்டாட்சியர், ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை நகல்களை தகவல்களாகத் தர கேட்டும் மனு
ஆட்சியரிடமிருந்து பெற்று மனுதாரருக்கு கொடுத்துள்ளார் என்பதையும் நம்மால் மறுக்க இயலவில்லை. பொதுத் தகவல் அலுவலர் மேற்சொன்ன இனங்கள் 4 முதல் 6-க்கான தகவல்களை மனுதாரருக்கு வழங்க அவரது பிரிவு 6(1)-ன்படியான மனுவினை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கோ அல்லது வட்டாட்சியர் அலுவலகத்திற்கோ பிரிவு 6(3)-ன்கீழ் அனுப்பி அதில் கோரப்பட்டுள்ள தகவல்களை மனுதாரருக்கு வழங்க உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்ய பொதுத் தகவல் அலுவலர தவறியுள்ளது சட்டப்பட சரியானதல்ல. இந்நிலையில், கீழ்க்கண்ட ஆணைகளைப் பிறப்பித்து இவ்வழக்கினை மறு தேதி குறிப்பிடாமல் இவ்வாணையம் ஒத்தி வைக்கிறது.
மனுதாரர் பிரிவு 6(1)-ன்கீழ் 27/06/2014 தேதியிட்டு தாக்கல் செய்த மனுவில் கண்டுள்ள இனங்கள் 1 முதல் 3-க்கான தகவல்கள் முழுமையாக அவருக்கு பொதுத் தகவல் அலுவலரால் அளிக்கப்பட்டுள்ளது என்று இவ்வாணையம் பதிவு செய்கிறது. மீதம் உள்ள இனங்கள் 4, 5, 6 குறித்தான தகவல்களை பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகல் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம், விருதுநகல் ஆகியவர்களிடமிருந்து பெற்றுத் தர பொதுத் தகவல் அலுவலர் தவறியுள்ளார். எனவே, இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலர்கள், அதாவது பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் மற்றும் பொதுத் தகவல் அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம், விருதுநகர் ஆகியோர் மனுதாரரின் பிரிவு 6(1)-ன்படியான மனுவில் இனங்கள் 4, 5,6 -ல் கேட்டுள்ள தகவல்களை சட்டத்திற்கு உட்பட்டு, பிரிவு 7(6)-ன்கீழ் கட்டணம் எதுவுமின்றி, ஒப்புகை அட்டையுடன்கூடிய பதிவஞ்சலில் மனுதாரருக்கு அனுப்பி, தகவல்களை மனுதாரர் பெற்றுக் கொண்டதற்கு ஆதாரமான ஒப்புகை அட்டையினை இணைத்து அறிக்கை ஒன்றினை இவ்வாணையத்திற்கு 30 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. மனுதாரரின் பிரிவு 6(1)-ன்படியான 27/06/2014 தேதியிட்ட மனுவின் நகலினை இவ்வாணையுடன் இணைத்து, பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் மற்றும் பொதுத் தகவல் அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம், விருதுநகர், ஆகியோர்களுக்கு அனுப்பி வைக்குமாறு இவ்வாணையப் பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது.
இவ்வழக்கு மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. அடுத்த விசாரணை தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.
Download
Case No SA 5922/2015 VAO, வட்டாட்சியர் அலுவலகம் மேல் அதிகாரிகள் மற்றும் கோட்டாட்சியர், ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை நகல்களை தகவல்களாகத் தர கேட்டும் மனு

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
