Case No 6931/2015 வருவாய் துறையில் கிராம அடங்கல் சான்றுகளை 2010 முதல் 2014 வரையிலான 5 ஆண்டுகளுக்கு பார்வையிட அனுமதி
வட்டாட்சியர், பென்னாகரம் வட்டம் அவர்களுக்கு அனுப்பியுள்ளதாகவும், அதன்பேரில் 10.04.2015லேயே மனுதாரருக்கு அவர்களுடைய மனுவில் கேட்டுள்ளவாறு பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம அடங்கல் சான்றுகளை 2010 முதல் 2014 வரையிலான 5 ஆண்டுகளுக்கு பார்வையிட அனுமதி வழங்கப்பட்டதாகவும், அலுவலக வேலை நேரத்தில் பார்வையிட அனுமதித்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாகவும், ஆனால் அவ்வாறு மனுதாரர் திரு. வி. நாகராஜன், பென்னாகரம் வருவாய் துறை அலுவலகத்திற்கு வேலை நாட்களில் நேரில் ஆஜராகி மேற்சொன்ன ஆவணங்களை பார்வையிட முன்வரவில்லை என்றும், அதன்பிறகு எத்தகைய ஆவணங்கள் வேண்டும் என்று எந்தவிதமான நகலையும், அவர் தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேசமயம் முதல் மேல்முறையீடு ஒன்றினை 15.04.2015 அன்று அனுப்பியுள்ளதாகவும், பின்பு இரண்டாம் மேல்முறையீட்டை 14.05.2015ல் இந்த ஆணையத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
5. மனுதாரருக்கு அவரது மனுவில் கேட்டுள்ளவாறு 2010 முதல் 2014 வரை 5 ஆண்டுகளுக்கு வருவாய்துறை கிராம அடங்கல் சான்றுகளை பார்வையிட அதை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு மனுதாரர் நேரில் ஆஜராகி மேற்சொன்ன ஆவணங்களை பார்வையிட எத்தகைய நகல்கள் வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க தவறியுள்ளார் என்றும், எனவே மனுதாரர் கோரிய தகவல்கள் வழங்க பென்னாகரம் வருவாய் துறையில் கிராம அடங்கல் சான்றுகளை 2010 முதல் 2014 வரையிலான 5 ஆண்டுகளுக்கு பார்வையிட அனுமதி வழங்கவும், அலுவலக வேலை நேரத்தில் பார்வையிடவும் தாங்கள் தயாராக உள்ளோம் என்று பொதுத் தகவல் அலுவலர் இந்த ஆணையத்தின் முன்பு தெரிவித்துள்ளார்.
6. எனவே இருப்பிலுள்ள ஆவணங்களின்படி வழக்கை முடித்துள்ள நிலையில் இன்றைய விசாரணையின் முடிவில், இவ்வாணையத்தால் கீழ்க்கண்ட ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன :-
অ மனுதாரருக்கு அவர் கோரிய தகவல்களை இவ்வாணை கிடைக்கப் பெற்ற 15 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அலுவலக வேலை நாட்களில், வேலை நேரத்தின்போது, முன் அனுமதியுடன் வருகை தந்து, அவர் கோரும் ஆவணங்களை பார்வையிட இதன் மூலம் அவருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
ஆ. பொதுத் தகவல் அலுவலரும் அவ்வாறே இவ்வாணை கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக்குள் மனுதாரர் நேரில் வருகை தந்து, ஆவணங்களை பார்வையிட்டு, குறிப்பெடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியும், அவர் எழுதிகேட்கும் அத்தியாவசியமான ஆவணங்களின் நகல்களை குறைந்த அளவில் இலவசமாக வழங்கிடவும் இதன் மூலம் அவருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
Download
Case No 6931/2015 வருவாய் துறையில் கிராம அடங்கல் சான்றுகளை 2010 முதல் 2014 வரையிலான 5 ஆண்டுகளுக்கு பார்வையிட அனுமதி

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
