Case No.SA 8924/2020 ஒரு நபர் சான்று வழங்கக்கூடாது என அரசு உத்தரவின் குறிப்பாணை எண்ணை தகவலாக வழங்குமாறும் கோரி மனு

ஒரு நபர் சான்று தற்போது மறுக்கப்படுகிறது அதன் காரணத்தை தகவலாக வழங்குமாறும், ஒரு நபர் சான்று வழங்கக்கூடாது என அரசு உத்தரவின் குறிப்பாணை எண்ணை தகவலாக வழங்குமாறும் என 2 இனங்களில் தகவல்களை கோரி, பொதுத் தகவல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம் என விலாசமிட்டு தாக்கல் செய்துள்ளார்.
மேல்முறையீட்டாளரின் மனுவானது 04.07.2020 தேதியிட்ட கடிதம் வாயிலாக பொதுத் தகவல் அலுவலர் / தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. பொதுத் தகவல் அலுவலரால் தான் கோரிய தகவல் வழங்கப்படாததால் மேல்முறையீட்டாளர் 02.09.2020 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)- ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் மாவட்டம் அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். அதன்பிறகும் பொது அதிகார அமைப்பினரால் தனக்கு முழுமையான தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை வழங்க உத்திரவிடுமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 16.10.2020 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (08.02.2021) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் அவர்களை தொலைபேசி வாயிலாக பலமுறை முயன்றும் தொடர்கொள்ள இயலவில்லை.
இதுகுறித்து இன்றைய விசாரணையில் தொலைபேசி மூலம் மூலம் தொடர்புகொண்டு ஆஜரான பொதுத் தகவல் அலுவலரிடம் வினவியபோது, மேல்முறையீட்டாளர் கோரியுள்ள ஒரு நபர் சான்று தற்பொழுது வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்குவதில்லை என்றும், மேற்படி சான்றினை பெற்று பல நபர்கள் சட்ட விரோதமாக செயல்படுவதன் காரணமாக அச்சான்றினை வழங்குவதை நிறுத்திவிட்டதாகவும், மேலும், இது குறித்த தகவல்களை மேல்முறையீட்டாளருக்கு 06.10.2020 தேதியிட்ட கடிதம் வாயிலாக பதிவு தபாலில் அனுப்பியுள்ளதாகவும் தொலைபேசி வாயிலாக வாக்குமூலமாகத் தெரிவித்தார். பொதுத் தகவல் அலுவலரின் வாதுரையை ஆணையம் ஏற்று இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு செய்து இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

Download

Case No.SA 8924/2020 ஒரு நபர் சான்று வழங்கக்கூடாது என அரசு உத்தரவின் குறிப்பாணை எண்ணை தகவலாக வழங்குமாறும் கோரி மனு

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்