Case No 3665/2017 கிராம உதவியாளர் எந்த தேதியில் இருந்து கிராம உதவியாளராக பணிநியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார் என்ற விபரம் குறித்து மனு

விசாரணையின் போது மேல்முறையீட்டாளர் தான் கோரிய இனம் 13 முதல் 20 வரையிலான தகவல் வழங்கப்படவில்லையென்றும் அதனை பெற்றுத்தருமாறும் கோரினார். பொது அதிகார அமைப்பின் ஆவணங்களின் அடிப்படையில் வழங்கக்கூடிய தகவல் மேல்முறையீட்டாளருக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டுமென்றே ஆணையம் கருதுகின்றது. இதுகுறித்து இன்றைய விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலரிடம் வினவியபோது மேற்படி தகவலை 15 தினங்களுக்குள் மேல்முறையீட்டாளருக்கு வழங்குவதாக எழுத்துமூலமாக ஆணையத்திற்குத் தெரிவித்தார். இதனை ஆணையம் பதிவு செய்து விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட உத்திரவு பிறப்பிக்கப்படுகின்றது:
மேல்முறையீட்டாளர் 26.12.2016 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1)-ன் கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் கோரியுள்ள இனம் 13 முதல் 20 வரையிலான தகவலை முறையாக மற்றும் முழுமையாக இவ்வாணை கிடைக்கப்பெற்ற 15 தினங்களுக்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 7(6)-ன்கீழ் கட்டணம் ஏதுமின்றி ஒப்புகை அட்டையுடன்கூடிய பதிவஞ்சலில் மேல்முறையீட்டாளருக்கு அனுப்பி, அதனை அவர் பெற்று ஏற்பளிப்பு செய்த விபரத்தை அறிக்கையாக இவ்வாணை கிடைக்கப்பெற்ற 30 தினங்களுக்குள் ஆணையத்திற்குச் சமர்ப்பிக்குமாறு பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடப்பட்டு, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு செய்து இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகின்றது.

Download

Case No 3665/2017 கிராம உதவியாளர் எந்த தேதியில் இருந்து கிராம உதவியாளராக பணிநியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார் என்ற விபரம் குறித்து மனு

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்