Case No.SA 984/B/19 ஆவூர் ஊராட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசு நலத்திட்டங்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனு
மேற்சொன்ன ஆவணங்களை பரிசீலிக்கையில், மனுதாரருக்குரிய தகவல்கள் அவருக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்பதை நன்கு உணர முடிகிறது. இருப்பினும் மனுதாரர் பிரிவு 6(1)ல் கோரியுள்ள தகவல்களை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என ஆணையம் கருதி, மேற்படி மனுதாரரின் தகவல் சம்பந்தமான விசாரணையை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள் தீர விசாரித்து 20 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையம் உத்திரவிட்டு, இவ்வழக்கின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் பிறப்பிக்கப்படுக்கின்றன:-
மனுதாரரின் 20.11.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 6(1) மனுவில் கோரியுள்ள தகவல்கள் தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள், மனுதாரர் கோரியுள்ள தகவல் அடங்கிய ஆவணங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 18(3)(b)ன்கீழ் ஆய்வுசெய்து, சம்பந்தப்பட்ட அலுவலர்கள், BDO, ADP, தலைமை நில அளவையர் மற்றும் மனுதாரரையும் விசாரணைக்கு அழைத்து, விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையை இவ்வாணை கிடைக்கப் பெற்ற நாட்களுக்குள் சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி பதிவுத் தபாலில் அனுப்பி வைத்து, மனுதாரர் ஏற்பளிப்பு செய்த ஒப்புகை அட்டையின் நகலுடன் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவலையும் இணைத்து ஒரு அறிக்கையாக தயார் செய்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அலுவலகப் பொதுத் தகவல் அலுவலர் மூலம் இவ்வாணையத்திற்கு பதிவஞ்சல் மூலம் சமர்ப்பிக்க ஆணையம் உத்தரவிடுகிறது.
Download
Case No.SA 984/B/19 ஆவூர் ஊராட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசு நலத்திட்டங்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மனு

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
