Case No.SA 9999/2022 UDR கைசிட்டா,A Register-வருவாய்த் துறையின் பராமரிப்பில் கட்டாயம் இருக்கவேண்டிய ஆவணங்கள்,தகவல்களை வழங்க பொதுத் தகவல் அலுவலர் கடமைப்பட்டவராக கருதப்படுகிறார்
மேலும், மனுதாரர் மனுவில் கோரியுள்ள ஆவணங்கள் தங்கள் பொது அதிகார அமைப்பு மற்றும் மேற்குறிப்பிட்டுள்ள சம்பந்தப்பட்ட அலுவலகங்களின் பராமரிப்பில் இல்லாத பட்சத்தில், அது சம்பந்தமாக பொதுத் தகவல் அலுவலர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம் அவர்கள் அலுவலக முத்திரையுடன் கூடிய சான்றொப்பத்துடன், ரூ.20/- மதிப்பிலான ஆணை உறுதி பிரமாண பத்திரம் (Swom Affidavit) (ஆவணம் பராமரிப்பில் இல்லை என்பதை) மூலம் உறுதி செய்யவும், பொதுத் தகவல் அலுவலர், மேற்படி ஆணை உறுதி பிரமாண பத்திரத்தினை மனுதாரருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவஞ்சலில் அல்லது நேரில் தகவலாக வழங்கவும் உத்தரவிடப்படுகிறது. இதன் வாயிலாக, மனுதாரரால் கோரப்படும் தகவல் (மனுதாரருக்கு பாத்தியப்பட்ட) குறித்து நீதிமன்றம், வருவாய் துறை அணுகி தனது வாதுரைகளை எடுத்துரைக்க ஏதுவாக அமையக்கூடும். மேற்குறிப்பிட்டவாறான தகவல்கள் மூன்றாம் நபர் தகவல்களாக இருக்கும் பட்சத்தில், மூன்றாம் நபர் ஆட்சேபனை கடிதத்தினை மனுதாரருக்கு தகவலாக வழங்கவும் உத்தரவிடப்படுகிறது.
7. மேற்படி, இவ்வாணையத்தின் ஆணைக்கிணங்க பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு தகவல் வழங்க தவறும் பட்சத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 20(1) மற்றும் 19(8)(b)-ன்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.
Download
UDR கைசிட்டா,A Register-வருவாய்த் துறையின் பராமரிப்பில் கட்டாயம் இருக்கவேண்டிய ஆவணங்கள்,தகவல்களை வழங்க பொதுத் தகவல் அலுவலர் கடமைப்பட்டவராக கருதப்படுகிறார்

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
