Case No:NC 4387/2021 7 வருடமாக சார் ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணையில் இருப்பதாக தெரிவிப்பது கண்டனத்துக்குரியது.

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 6(1)ன் கீழ் முதலில் மனு செய்து, தகவல் வழங்க கால தாமதம் செய்யப்பட்ட வகைக்கு அப்போதைய பொதுத் தகவல் அலுவலர் திரு.ஏழுமலை. தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அவர்கள் மீது தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, பிரிவு 20(1)-ன் கீழ் நாள் ஒன்றுக்கு ரூ.250/-அதிகபட்சமாக 25,000/-ஐ ஏன் விதிக்கலாகாது என்பதற்கான எழுத்துப்பூர்வமான விளக்கத்தினையும், 15.11.2021 அன்றைய இரண்டாம் மேல்முறையீட்டு விசாரணையில் ஆஜரான பொதுத் தகவல் அலுவலர் திரு ஏழுமலை அவர்கள் மேல்முறையீட்டாளர் கோரும் தகவல்கள் தொடர்பாக முழுமையாக வழங்க உத்திரவு பிறப்பிக்கப்பட்டும், முழுமையான தகவல்கள் வழங்காததால் மேல்முறையீட்டாளருக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல் காரணமாக சட்டப்பிரிவு 19(8)(b)-ன் கீழ் பொது அதிகார அமைப்பானது ரூ.10,000-ஐ இழப்பீடாக மேல்முறையீட்டாளருக்கு ஏன் வழங்கக்கூடாது என்பதற்கான எழுததுப்பூர்வமான விளக்கத்தினைக் கோரி தனியே காரணம் கேட்கும் குறிப்பாணை அனுப்பப்படுகிறது.

Download

Case No:NC 4387/2021  ஏழு வருடமாக சார் ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணையில் இருப்பதாக தெரிவிப்பது கண்டனத்துக்குரியது.

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்