அரசியல் சாசனமும் - RTI சட்டமும்
உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மக்களுக்கு உறுதி செய்து அளித்துள்ள தகவல் பெறும் உரிமை :
தகவல் பெறும் உரிமை என்பது நமது இந்திய அரசியல் அமைப்பு சாசனம், 1950 உறுபு 19(1)(அ) அளிக்கும் மிக உறுதியான உரிமையாகும். உறுபு 19(1)(அ) அளிக்கும் உரிமையின் கீழ் தான் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 உருவாக்கப்பட்டு நாம் அரசு அலுவலகங்களில் தகவலை உரிமையாக பெற்று வருகிறோம்.
தகவல் பெறும் உரிமைச் சட்டம்,2005 பிரிவு 4 என்பது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் முதுகெலும்பாகும்; அதை அறியாமல் இருப்பது, கண்பார்வை இருந்தும் கண்களை மூடிக் கொண்டு சாலையில் செல்வதற்கு சமமாகும்.
தகவல் பெறும் உரிமைச் சட்டம்,2005 பிரிவு 4 குறித்து அரசு அலுவலர்கள் நன்கு அறிந்ததன் பொருட்டே அவற்றை அவர்கள் முழுமையாக நடைமுறைப்படுத்த மறுக்கின்றனர். இந்த ஏமாற்று வேலையை தடுக்கவும், மக்களின் பொருளாதாரம், நேரம், தகவல் பெறும் உரிமையை ஆகியவற்றை பாதுகாப்பதற்கு மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், இந்தியாவிலுள்ள அனைத்து தகவல் ஆணையங்களுக்கும் சில சட்டக்கடமைகளை உத்தரவிட்டுள்ளது, மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் இந்திய அரசியல் அமைப்பு சாசனம், 1950 உறுபு 141 இன் கீழ் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது அனைத்து அரசும்,குடிமக்களும் பின்பற்ற வேண்டிய சட்டமாகும்.
இத்தகைய முயற்சி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி தனது உரிமைகளைப் பெற விரும்பும் மக்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
HON’BLE SUPREME COURT OF INDIA WP.[CIVIL] No. 990 / 2021
HON’BLE SUPREME COURT OF INDIA WP.[CIVIL] No. 360 / 2021
ஆகிய தீர்ப்புகளை நீங்கள் படித்து, அறிந்து வைத்திருந்தால் போதும், அரசு அலுவலகங்களில் தகவல் பெரும் திறமைசாலியாக மாறுவதுடன் மட்டுமல்லாமல், அரசு அலுவலர்கள் பார்வையிலும் நீங்கள் சட்டம் ஞானம் உள்ளவராகவே கருதப்படுவீர்கள்.
யானை தன்பலம் அறியாமல் இருந்தால் அதனை மக்கள் அடிமைப்படுத்தி யாசகம் பெற வைப்பார்கள், அதுபோல மேற்கூறிய தீர்ப்புகளை அறியாமல் இருக்கும் வரை அரசு அலுவலகளில் உரிய தகவல்களை உங்களால் திறம்பட பெற இயலாது.
மேற்கூறிய தீர்ப்புகளை நீங்கள் படிப்பதன் மூலம் பெறும் பலன்கள்
- தகவல் ஆணையத்திற்கு நீங்கள் தகவலுக்காக செல்வது குறையும்,
- அனைத்து தகவல்களையும் மின்னனு முறையில் பெற இயலும்
- தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் நீங்கள் நிபுணராகலாம்
- நீங்கள் கேட்கும் தகவல்கள் சட்டத்திற்குட்பட்டு அனைத்தும் அரசிடமிருந்து கிடைக்கும்.
வெற்றி உங்களது கைகளில்

காசி விஸ்வநாதன்
வழக்கறிஞர்
